பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மருளன்மின் கோள்கருது மால்வரை யாளிக் குருளையும் கொல்களிற்றின் கோடு."

ஏறாண்முல்லை:

மறப்பண்பு மேலும் வளருமியல்புடைய மறக்குடியின் ஒழுக்கத்தைக் கூறியது ஏறாண்முல்லை என்னும் துறையாம்.

(எ.டு)

“கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்

ஐயம்:

முன்னின்று மொய்யவிந்தர் என்னையர்-பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தானென் ஏறு.

மிகுந்த வலிமை பொருந்திய தோளையுடைய தலைவன் ஒரு பூம் பொழிலிடத்து அத்தலைவியைக் கண்ட பின்னர் இன்ன தன்மையுடையாள் இவள் என்று அறியாதவனாய் ஐயமுற்றுக் கூறியது ஐயம் என்னும் துறையாம்

(61.6)

“அணங்கு கொல்? ஆய்மயில் கொல்லோ? கணங்குழை மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு.”

ஒருதனி நிலை:

தன்படை தளர்தல் கண்ட வஞ்சி மறவன் ஒருவன் தமிய னாய்க் கல்லாற் கட்டின அணை வெள்ளத்தினைத் தடுத்தல் போன்று அப்பகைப் படையைத் தடை செய்து நின்ற நிலைமை யினைக் கூறியது ஒரு தனி நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

66

வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமால் இந்நின்ற

வாடல் முதியாள் வயிற்றிடம்-கூடார்

பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா

இரும்புலி சேர்ந்த இடம்.'