பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி.”

கொடுப்போர் இன்றியும் நடை பெறும் கரணம்;

வி

தலைவி தலைவனுடன் உடன் போக்கிற் சென்ற விடத்துக் கொடுத்தற்குரிய தமர் இல்லாதவிடத்தும்

தலைவியின்

சடங்கொடு கூடிய மணம் நடை பெறுதல் உளதாம்.

(எ.டு)

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற்

செயலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே”

(குறுந்15)

இதனுள் வாயாகின்று' எனச் எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும் ‘விடலை' யெனப்பாலை நிலத்துத்தலைவன்

பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்தது.

கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தல்:

தனக்கு ஒன்றைக் கொடுத்தோரைப் புகழ்தலும் கொடாத வரைப் பழித்தலுமாம்.

(எ.டு)

“பாரி பாரி யென்று பல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன்

மாரியு முண் டீண்டு லகுபுரப் பதுவே” இது கொடுப்போர் ஏத்தியது.

“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன்”

இது கொடாஅர்ப்பழித்தல்.