பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

“உள்ளத் தவலம் பெருக ஒளிவேலோய் எள்ளத் துணிந்த இருள்மாலை- வெள்ளத்துத் தண்டார் அகலம் தழூஉப்புணையா நீ நல்கின் உண்டாமென் தோழிக் குயிர்.”

துயிலெடை நிலை: (அ)

4

தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சி யின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் போது புகழ்வதைக் குறிப்பது துயிலெடை நிலையாகும்.

(61.6)

66

"கானம் பொருந்திய கயவாய் மகளிரின் யானுறுந் துயர நந்திய பானா

ளிமையாக் கண்ணோ டமையாக் காத்தநின் மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப் போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ சேக்கை வளர்த்தனை பெரும தாக்கிய வண்கை யுவண னுயிர்செல வாங்கவ னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானைப் பொலந்தேர் வளவ நின்றுயி லெழுமதி நீயு

மொன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே"

துயிலெடை நிலை: (ஆ)

ஒரு வேந்தனை நின்பகை மன்னர்க்கு அருள் செய்ய எழுந் திருப்பாயாக எனக்கூறி உறக்கத்தினின்றும் எழுப்பியதும் துயிலெடை நிலை என்னும் துறையாம்.

(எ.டு)

"அளந்த திறையார் அகலிடத்து மன்னர்

வளந்தரும் வேலோய் வணங்கக்-களந்தயங்கப்

பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத்

தூமலர்க்கண் ஏர்க துயில்.