பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

பாசி மறன்:

6

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மதிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்புவது பாசிமற

னாகும்.

(61.6)

66

'மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்

பாதீடு:

பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா- ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா

னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு'

வெட்சி மறவர்களின் படைத்தலைவன் தன்னுடைய சுற்றத் தாராகிய மறவர்கள் பற்றிக் கொணர்ந்த பசுக்களை, அந்த, அந்த மறவர் ஆற்றிய தொழிலின் தகுதியை அறிந்து அவ்வத் தகுதிகட் கேற்ப வழங்கியது பாதீடு என்னுந் துறையாம்.

(எ.டு)

"ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்- விள்வாரை மாறட்ட வென்றி மறவர் தஞ் சீறூரிற்

கூறிட்டார் கொண்ட நிரை.”

பாடகச் சீறடி பணிந்த பின் இரங்கல்:

தலைவன் குவித்தகையுடனே

பாடகம்

என்னும்

காலணியை அணிந்து தனது அடியில் வணங்கிய பின்னர்த் தலைவி நெஞ்சு நெகிழ்ந்தது பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் என்னும் துறையாம்.

(எ.டு)

“அணிவரும் பூஞ்சிலம் பார்க்கும் அடிமேல் மணிவரை மார்பன் மயங்கிப்- பணியவும் வற்கென்ற நெஞ்சம் வணங்காய் சிறுவரை நிற்கென்றி வாழியர் நீ.

பாடாண் பாட்டு:

ஒரு மன்னனுடைய புகழும் வன்மையும் பொருளைத் தனக் கெனப் பாதுகாவாத வண்மையும் அருளுடைமையும் என்று