பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தண்டா விழுப்படர் நலியவும்.

உண்டால் என்னுயிர் ஓம்புதற் கரிதே."

புண்ணொடு வருதல்:

உலகம் இருக்கும் வரையும் அதனோடே நிற்குமாறு தன் புகழை நிற்கச் செய்து, தான் தன்னுடல் அழிதற்குக் காரண மாகிய விழுப்புண்ணோடே ஒரு மறவன் வந்தது புண்ணொடு வருதல் என்னும் துறையாம்.

(எ.டு)

“வெங்குருதி மல்க விழுப்புண் ணுகு தொறூஉம் இங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்-பைங்கண் இனம்போக்கி நின்றார் இகல்வாட்டி வேந்தன் மனம்போல வந்த மகன்.'

புலவரேத்தும் புத்தேள்நாடு;

பிறவி நோய் நீங்குவதற்கான மெய்க்காட்சியினையுடையராய், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், என்ற ஐம்புலனுணர்ச்சிகளை வென்றவரது வீட்டின் (பேரின்ப உலகம்) தன்மையைக் கூறுவது புலவரேத்தும் புத்தேள் நாடு என்னும் துறையாம்.

(எ.டு)

"பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம் ஐயமொன் றின்றி அறிந்துரைப்பின்-வெய்ய

பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்று

இகலின் றிளிவரவும் இன்று.

புலவர் ஆற்றுப்படை:

இறையருள் பெற்ற ஒரு புலவன், அது பெறுந் தகுதியுடைய மற்றொரு புலவனை இறைவன் பால் செல்ல வழிப்படுத்துவது புலவர் ஆற்றுப்படை என்னும் துறையாம்.

(எ.டு)

“வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும்- பொறிகட்கு இருளீயும் ஞாலத் திடரெல்லாம் நீங்க

அருளீயும் ஆழி யவன்.’