பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இளங்குமரனார் தமிழ்வளம் யின்மையின் அதனை வேண் ாது இறப்பதும் மறக்காஞ்சியாகும்.

4

புண்ணைக் கிழித்து

(எ.டு)

“பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்றுமுகந் தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானைதன் னோடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கியாங் குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ களிறு படி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண

விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே’

மறமுல்லை:

தன் மன்னன் தனக்கு வழங்கும் பொருளிடத்துக் கருத்தின்றிப் பகைவெல்லலே குறிக்கோளாகக் கொண்டு சினக்கும் போர் மறவனது தன்மையைச் சொல்லியது மறமுல்லை என்னும் துறை யாம்.

(எ.டு)

“வன்னவில் தோளானும் வேண்டிய கொள்கென்னும் கன்னவில் திண்டோட் கழலானும்- மன்னன்முன்

ஒன்றான் அழல்விழியா ஒள்வாள் வலனேந்தி நின்றான் நெடிய மொழிந்து.’

மறனுடைப் பாசி:

நொச்சி மறவர் மதில் முற்றிய உழிஞை மறவரோடு பொருது புறங் கொடாது பட்டது மறனுடைப் பாசி என்னுந் துறையாம்.

(எ.டு)

“பாயினார் மாயும் வகையாற் பலகாப்பும் ஏயினார் ஏய இகல்மறவர்- ஆயினார்

ஒன்றி யவரற ஊர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி அமரர் விருந்து’

99