பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அகவற்றுள்ளல்

வெண்டளையுங் கலித்தளையும் விரவி வரும் ஒருவகைப்

பாடல்.

அகவற்றூங்கல்

ஒன்றாத வஞ்சித்தளையால் வரும் ஒருவகைப் பாவினம். அக்கரச்சுதகம்

இருபதுவகைச் சித்திரக் கவிகளுள் ஒன்று. இஃதோர் மிறைக் கவி. ஒரு சொல்லை ஒவ்வோரெழுத்தாக நீக்கிப் பிரித்துப் பொருள்தரப்பாடுவது. இது மாத்திரைச் சுருக்கம் எனவுங்கூறப்

பெறும்.

அக்கரம் = எழுத்து.

அக்கரவர்த்தனம்

இருபதுவகைச் சித்திரக் கவிகளுள் ஒன்று. அஃது ஓரெழுத் தானொரு மொழியாய்ப் பொருட் பயந்து ஓரெழுத்தேற்றுப் பிறிதொரு மொழியாய்ப் பொருட் பயந்து அவ்வாறு முறையானே ஏற்றவேற்ற வேறுவேறு மொழியாய்ப் பொருட்பயந்து வரப் பாடுவதோர் சித்திரக் கவி.

அங்கதப் பாட்டு

ஒருவனுடைய வசையைப் பாடுதல்.

அங்கமாலை

ஆண்மகனுக்கும் பெண்மகளுக்கும் சிறந்தனவாகக் கூறும் உறுப்புக்களை வெண்பாவாலாயினும் வெளிவிருத்தத்தாலாயினும் பாதாதிகேசம் (அடிமுதல் முடிவரை) கேசாதிபாதம் (முடிமுதல் அடிவரை) முறை பிறழாமல் தொடர்பாகப் பாடுவது அங்க L மாலையாகும்.

அசை

அசைநிலை. அலகு ஒன்றேனும் இரண்டேனுங் கொண்டு சீர்க்குறுப்பாய் வருஞ்செய்யுள் உறுப்பு.