பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைச்சீர்

யாப்பு

351

தளைகொள்ளுதற்கு டன னாகி ஓரசையே செய்யுட்களில் சீராகவும் நிற்பது.

அசை கூனாதல்:-

இரண்டு சீரான் வரும் வஞ்சியடி, முச்சீரான் வரும் வஞ்சியடி ஆகிய இரண்டு அடியினும் அசை கூனாகிவரும். எடு:-

“வாள் வலந்தர மறுப்பட்டன

செவ் வானத்து வனப்புப் போன்றன"

எனவும்,

66

'அடி அதர் சேறலின் அகஞ்சிவந்தன”

எனவும் அசை கூனாகி வந்தவாறு காண்க.

அசைநிலையில் ஒற்றளபெடையின் நிலை

ஒற்றுஅளபு எடுத்தாலும் உயிரள பெடை போலச் சீர் நிலை பெற்று ஓர் அசையாய் நிற்குந் தன்மையை யுடையது. எடு:-

‘கண்ண் டண்ண் ணெனக் கண்டுங் கேட்டும்

அசைச்சீர்

ஓரசையே சீராய் நிற்பது அசைச்சீர். இது வெண்பாவின் ஈற்றில் நிற்குந் தன்மையது. நாள், மலர் என்னும் வாய்பாட்டால் கூறப் பெறும்.

அசை நிலையில் உயிரளபெடையின் நிலை

உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும். அசை ஆகா

மையே பெரும்பான்மையாம்.

அசையந்தாதி

அடியீற்றசை வருமடி முதலசையாய் வர முறையே

தொடுப்பது.