பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அடி இயைபுத் தொடை

ஓரடியின் ஈற்றுச் சொல் அல்லது எழுத்து மற்ற அடியின் ஈற்றிலும் வரத் தொடுப்பது அடி இயைபுத் தொடையாகும்.

எடு:-

இன்னகைத் துவர்வாய்க் கிளவியும் அணங்கே

நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே

ஆடமைத் தோளி ஊடலும் அணங்கே

அரிமதர் மழைக்கணும் அணங்கே

திருநுதற் பொறித்த திலகமும் அணங்கே.

அடி எதுகைத் தொடை

அடிதோறும்

முதலெழுத்து

அளவொத்து நிற்க

இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடி எதுகைத் தொடையாகும்.

எடு:-

“எழுவாய் - மழுவாய் தழுவா - தொழுதே”

அடிகளின் வகை

எழுத்துக்களால் அசையும், அசைகளால் சீர்களும், சீர்கள் தொடரும் விதத்தால் தளைகளும், அத்தளைகளால் அடிகளும் அமைகின்றன. அந்த அடி, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி என ஐவகைப்படும்.

அடிமறி மண்டில ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் இலக்கணம் பெற்றுப் பொருள் முற்றிய அளவடிகளால் நடப்பது அடிமறி மண்டில ஆசிரியப்பா. இச் செய்யுளடிகளை இடமாற்றி அமைத்தாலும் பொருள் கெடாது நடக்கும் இயல்பினதாகும்.

எடு:-

66

“தீர்த்த மென்பது சிவகங் கையே

ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே

மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே

இவ்வகவலுள் எவ்வடியினை எவ்வாறு மாற்றியமைப்பினும்

று

பொருள் நிலை மாறுபடாமையை அறிக.