பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

இளங்குமரனார் தமிழ்வளம் – 4

என்னும் பொருண்மைக்கண் வரும் வெண்பாக்கள் எல்லாம் அடியளவு வரையறுக்கப் படா. பொருள் முடிவு பெறும் வரை வேண்டிய அளவானே அடிகள் வரப் பெறும்.

அடியின் அளவு

நான்குசீர் ஒன்றாகத் தொடுத்து வருவதனை அடியென்று கூறப்பெறும்.

எடு:- “திருமழை தலைஇய விருணிற விசும்பின்”

எனவும்

6

66

'அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட

எனவும்,

66

‘அரியதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்”

எனவும் வந்தன.

அட்ட மங்கலம்

கடவுள் காக்க வேண்டுமென்று விருத்தப் பாடல்கள் எட்டுப் பாடுவது அட்டமங்கலமாகும்

அட்டம்=எட்டு.

அநுராகமாலை

தலைவன் கனவின் கண் ஒருத்தியைக் கண்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன்னுயிர்ப் பாங்கற் குரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவாற் பாடப் பெறுவது அநுராகமாலை என்று பெயர் பெறும்.

அந்தாதித் தொடை

அசையேனும் சீரேனும் அடுத்த

செய்யுளடி யொன்றின் இறுதியிலுள்ள எழுத்தேனும்,

அடியின்

தொடுப்பது அந்தாதித் தொடையாகும்.

எடு:-

“வேங்கையஞ் சார லோங்கிய மாதவி விரிமலர்ப் பொதும்பர் மெல்லியன் முகமதி திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே'

முதலாமாறு