பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

363

பெற்ற பெருஞ்செல்வம் போல அவருக்கும் கிடைத்தற் பொருட்டு இன்னவழியே சென்று இன்னானை அடைவீர்களாயின் எம் போன்று பெருஞ்செல்வம் பெறுவீர் என்று ஆற்றுப் படுத்துவது ஆற்றுப் படையின் இலக்கணமாகும்.

இடைநிலை அளபெடைத் தொடை

முதல்சீரின் நடுவெழுத்து அளபெடுத்து ஒன்றுவது இடை நிலை அளபெடைத் தொடையாகும்.

எடு:-

"சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத் துனைஇய மாலை துன்னுதல்.'

இடைநிலைப் பாட்டு என்னுந் தாழிசை

தாழிசைகள் தரவில் சுருங்கி வரும். எனவே, தாழிசை நான்கடியின் மிகாமலும், மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும்.

இணை அளபெடை

அடிமுதல் இரண்டு சீர்கள் அளபெடுத்து நிற்குமாறு தொடுப்பது இணை அளபெடையாகும்.

எடு:-

“தாஅட் டாஅ மரைமல ருழக்கிப்”

இணைஇயைபு

அளவடியின் மூன்றாவது நான்காவது ஆகியசீர்கள் ஒரே சால்லாய் ஒன்றியிருத்தல் இணை இயைபாகும். மேலும் சீர்களின் எழுத்துக்கள் ஒன்றியிருந்தாலும் இணைஇயைபே. எடு:-

“மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே"

இணை எதுகை

அளவடியின் முதல் இரண்டு சீர்களில் முதலெழுத்து அள வொத்து நிற்ப இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது ணை எதுகையாகும்.