பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

எடு:-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி”

இணைக்குறள் ஆசிரியப்பா

முதலடியும் இறுதியடியும் அளவடிகளாகவும், இடையே சிந்தடி, குறளடி அளவடிகள் விரவிவர, ஆசிரியப்பாவின் இலக்க ணத்தைப் பெற்று, மூன்றடிச் சிற்றெல்லையாகவும் பேரெல்லை யாகப் பலவடிகளைக் கொண்டு நடப்பது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும். இப்பாவின் ஈற்றடி அளவடியாக இருப்பது இன்றியமையாதது.

எடு:-

“நீரின் தண்மையுந் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சார னாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே.

இணைமணிமாலை

வெண்பாவும் அகவலும், வெண்பாவுங்கலித் துறையுமாக, இரண்டிரண்டாக இணைத்து வெண்பாவகவல் இணைமணி மாலை, வெண்பா கலித்துறை இணைமணிமாலை என நூறு நூறு பாடல்கள் அந்தாதித்துப் பாடுவது

L மாலையாகும்.

இணைமுரண்

ணைமணி

அளவடியின் முதல் இரண்டு சீர்களில் சொற்கள் முரண்படத் தொடுப்பது இணைமுரணாகும்.

எடு:-

“சீரடிப் பேரக லல்கு லொல்குபு”

இணைமோனை

அளவடியின் முதல் இரண்டு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது இணைமோனையாகும்.