பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

மயலார் நாற்கதி மருவார்

பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே."

குறள்வெண் செந்துறை

இரண்டடியாய்த்

தம்முள்

383

அளவொத்து விழுமிய

6

பொருளும் ஒழுகிய ஓசையும் உடைத்தாய், எந்தத் தளையும் பெற்று, ஓரடியில் எத்தனை சீர்களையும் உடையதாய் அமைந்து நடப்பது குறள்வெண் செந்துறையாகும்.

எடு:-

66

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை. குறள்வெண்பாவின் இலக்கணம்

வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாகவும் ஏனையடி அளவடி யாகவும் அமைய இயற்சீர், காய்ச்சீர்களும், வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளைகளும் விரவி வர, ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றைப்பெற்று செப்பலோசையுடைத்தாய் இரண்டடியால் அமைந்து நடப்பது குறள் வெண்பாவாகும். இவ்வெண்பா ஒரு விகற்பத்தானும் இருவிகற்பத்தானு வரும். குறுவெண்பாட்டு என்பதும் இது.

குளகச் செய்யுள்

வேறுபாடல்களை அவாவி பல பாட்டாய் ஒருவனைக் கொண்டு முடிவதும், ஒரு பெயர் கொண்டு முடிவதும் குளகம் என்னுஞ் செய்யுளாம்.

எடு:-

6

"முன்புலக மேழினையுந் தாயதுவு மூதுணர் வோர் இன்புறக்கங் காநதியை யீன்றதுவுந் - நன்பரதன்

கண்டிருப்ப வைகியதுவுங் கான்போ யதுமிரதம் உண்டிருப்பா ருட்கொண்ட தும்”

"வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்

அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் - செந்தமிழ்சேர்

நாவலவன் பின்போந்த நன்னீர்த் திருவரங்கக்

காவலன் மாவலவன் கால்.'

இஃது பெயர் கொண்டு முடிவதற்கு எடுத்துக்காட்டு.