எழுத்து
‘ஏ’ என்னும் சாரியை பெறும் அளவுப் பெயர்கள் :
25
உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய எண்ணுப் பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன், அவ் வவற்றிற்குக் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின், பெரும்பாலும் `ஏ' என்னும் சாரியை பெறும்.
(எ.டு) ஒன்று + கால் = ஒன்றேகால்
தொடி + கஃசு
=
தொடியேகஃசு
கலன் + பதக்கு
=
கலனேபதக்கு
கால் + காணி
=
காலேகாணி
கழஞ்சு + குன்றி = கழஞ்சேகுன்றி
உழக்கு+ ஆழாக்கு =
=
உழக்கேயாழாக்கு
ஏகாரம் பிறக்குமிடம் :
வாய் திறத்தலுடனே
மேல்வாய்ப்பல்லை
அடிப்பாகம் பொருந்த ஏகாரம் பிறக்கும்.
நாக்கின்
‘ஏழ்’ என்னும் எண்ணுப்பெயர் முன் அளவுப் பெயர் புணர்தல் : ஏழ் என்னும் எண்ணுப்பெயர் முன் அளவுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து நெடுமுதல் குறுகலும் உகரம் பெறுதலும் ஆகும்.
(எ.டு) ஏழ் + பலம்
=
எழுபலம்
ஏழ் + கழஞ்சு
=
எழுகழஞ்சு
‘ஏழ்’ என்னும் எண்ணின் முன் நிறைப்பெயர் புணர்தல் :
ஏழ் என்னும் எண்ணுப்பெயர் முன் நிறைப் பெயர் வருமொழியாய் வருமிடத்து நெடு முதல் குறுகலும் உகரம் பெறுதலும் ஆகும்.
(எ.டு) ஏழ் + கலம் = எழுகலம்
‘ஏழ்’ என்னும் எண்ணுடன் பத்து என்னும் எண் புணர்தல் :
ஏழ் என்பதனோடு பத்து என்னும் எண் புணருமிடத்து அப் பத்து என்னும் சொல்லின் இடை யொற்றுக் கட்டு ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும்.
(எ-டு) ஏழு + பத்து
=
எழுபஃது ழூ எழுபது