பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

சித்திரவகவல்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

சீர்தொறும் அகவி வருவன சித்திரவகவலாகும்.

சித்திரகவி:-

ஏகபாதமும், எழுகூற்றிருக்கையும், காதை கரப்பும், கரந் துறைச் சய்யுளும்,கூடச் சதுக்கமும், கோமூத்திரியமும், இரட்டை நாகபந்தமும், அட்ட நாக பந்தமும் அறிந்து பாடுவோன் சித்திரகவியாவான். இச்சித்திரகவி இந்நாளில் இரதபந்தம் கமல பந்தம் முதலிய பலவாக வளர்ந்து விரிந்துள்ளது.

சிந்தடி

மூன்றுசீர்களைக் கொண்டது சிந்தடியாகும். இவ்வடி வஞ்சி விருத்தம். வெண்பாவின் இறுதி, நேரிசை ஆசிரியப்பாவில் ஈற்றயல் முதலியவிடங்களில் வரும். ஏழெழுத்து முதல் ஒன்பது எழுத்துவரை வருவது சித்தடியாகும் என்பர் தொல்காப்பியர்.

எடு:-

66

'அன்று மூல மாதியாய் இன்று காறு மேழையான் நன்று தீது நாடலேன் தின்று தீய தேடினேன்.

சிந்தடி வஞ்சிப்பா

வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனியீற்று மூவகைச்சீர்கள் அல்லது நிரையசையை இறுதியிலுடைய நாலசைச்சீர்கள் மூன்றைப் பெற்று, மூன்றடிச் சிற்றெல்லையாகவும் பலவடிகளைப் பேரெல்லையாகவுங் கொண்டு தூங்கலோசையுடைத்தாய், தனிச் சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இறுவது சிந்தடி வஞ்சிப் பாவாகும்.

எடு:-

“பாலத்தஞ் செலவிவளோடு படுமாயின் நீரவத்தை நடவேண்டா வினிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கட் டெவிட்டனர் கொல்லோ எனவாங்கு