பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பண்பையும், மாறுபாடு கொண்ட கருத்தையுந் தம்மிடத் திலுடையவர் நூல் கற்பிக்கும் ஆசிரியராகுதல் இலராவர். நவமணிமாலை

வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமுமாக ஒன்பது பாடல்களை அந்தாதியாகப் பாடுவது நவமணிமாலை ய யாகும்.

நாமமாலை

அகவலடியும், கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப் பாவி னால் ஆண்மகனைப் புகழ்ந்து பாடுவது நாமமாலையாகும். நாற்பது

து

இடமும், பொருளுங், காலமும், ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது நாற்பது என்னும் எண்ணால் வரும் நூலாகும். இது காலம் பற்றி வருவது கார் நாற்பது எனவும், இடம் பற்றி வருவது களவழி நாற்பது எனவும், பொருள் பற்றி வருவது இன்னா நாற்பது இனியவை நாற்பது என்பன போலவும் வழங்கும்.

நான் மணிமாலை

வெண்பாவும், கலித்துறையும், அகவலும், விருத்தமும் அந்தாதியாக நாற்பது பாடுவது நான் மணிமாலையாகும். எடு:- நால்வர் நான் மணிமாலை.

நிரை அசை

குறில் இணைந்துவரினும், குறில் நெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து ஒற்றொடுவரினும், குறில்நெடில் இணைந்து ஒற்றொடுவரினும் நிரையசையாகும்.

எடு:- நெறி - சுறா.

நிறம் -குரால்.

நிரைபு அசை

நிரை அசையோடு சேர்ந்து வருகிற குற்றுகரமும், அதனோடு சேர்ந்து வருகிற முற்றுகரமும் நிரைபு அசையாகும்.

எடு:- வரகு, அரக்கு, மலாடு, பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு.