பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

வாக்கி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(நாவலன்) அறம் பொருள் இன்பம் வீடென்பன தம்மில் கலக்காமல் கேட்டோர் விரும்ப இலக்கணத்தையாவது இலக்கி யத்தை யாவது செஞ்சொல்லால் விளங்கச் சொல்லுபவன் வாக்கியெனப் பெறுவான்.

வாதி

(தருக்கி) எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பொருந்திய மேற்கோளும் காரணமும் அவற்றிற்குப் பொருந்திய எடுத்துக் காட்டும் சொல்லி முடிக்க வல்லவன் வாதியெனப் பெறுவான்.

வாதோரணமஞ்சரி

யானையை வழிப்படுத்தி அடக்கினவருக்கும் எதிர்த்த யானையை வெட்டி யடக்கியவருக்கும் பற்றிப் பிடித்துச் சேர்த்த வருக்கும் வீரத்தன்மையின் சிறப்பை வஞ்சிப் பாவாற் பாடுவது வாதோரணமஞ்சரியாகும்.

வாயுறை வாழ்த்து

வேம்புங் கடுவும் போல்வன வாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக் கூடாவாயினும், பின்னர்ப் பயன்றருமென மெய்ப்பொருளுற L மருட்பாவாற் கூறுவது

வாழ்த்தெனப் பெயர் பெறும்.

வாழ்த்துக்குரிய பாக்கள்

வாயுறை

கடவுள், முனிவர், ஆன், ஆசிரியர், அரசன், மழை, நாடு ஆகியவற்றை நால்வகைப் பாக்களாலும் வாழ்த்துதல் முறையாம். வித்தாரக் கவி

விரிவுக்கவி மறம் கலிவெண்பா மடலூர்தல் இயல்இசை, பாசண்டத் துறை, பன்மணி மாலை முதலிய பலவாக மிகவும் விரித்துப் பாடுவோன் வித்தாரகவி என்னுஞ்சிறப்புப் பெயர் பெறுவான்.

விருத்த விலக்கணம்

வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், குடை, இவ்வொன்பதையும் பத்துப்பத்து அகவல் விருத்தத்தால் ஒன்பது வகையாகப் பாடுவது விருத்தவிலக்கணமாகும். (விருத் தப்பா-மண்டலிப்பா.)