பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

வெண்டளை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நிலைச்சீர் காய்ச்சீராக விருந்து வருஞ்சீரின் முதலசை நேரசையாயிருந்தால் வெண்டளையாகும். அஃதாவது காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளையாகும். இது வெண்பா விற்குரிய தளையாம்.

வெண்பாவின் பொது இலக்கணம்

வெண்பாவில் ஈற்றடி மூன்று சீர்களாகவும், ஏனையடி நான்கு சீர்களாகவும் அமைய, இயற்சீர், காய்ச்சீர்களும் வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளைகளும் விரவிவர, ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றை ஏற்றுச் செப்பலோசை உடையதாய் அமைவதே வெண்பாவாகும்.

வெண்டாழிசை

மூன்று அடிகளை உடையதாய், ஈற்றடி சிந்தடியாகவும் ஏனையடி அளவடியாகவும் அமைய, இயற்சீர் காய்ச்சீர்களும், இயற்சீர்வெண்டளை வெண்சீர் வெண்டளைகளும் விரவி வர, ஈற்றடியின் இறுதிச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய் பாடுகளுள் ஒன்றினைப் பெற்று, செப்பலோசையுடைத்தாய், ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வருவது வெண்டாழிசை யாகும். இதனை வெள்ளொத்தாழிசை என்றுங்கூறுவர்.

எடு:-

66

'அன்னா யறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி ஒன்னா ருடைபுலம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல்.

ஏடி யறங்கொல் நலங்கிளர் சேட் சென்னி

கூடா ருடைபுலம்போல நலங்கவர்ந்து

நீடான் துறந்து விடல்.

பாவா யறங்கொல் நலங்கவர் சேட்சென்னி

மேவா ருடைபுலம்போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்.’

வெண்டுறை

மூன்றடிகளைச் சிற்றெல்லையாகவும்,

ஏழடிகளைப்

பேரெல்லை யாகவுங் கொண்டு, இடையிடை நான்கடியாயினும்,