பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அணி

அக்கரச் சுதகம்

ஒரு பொருளைத் தருவதொரு தொடர்மொழியாய்த் தொன்று தொட்டு வருவதைப் புலவன் ஒவ்வோரெழுத்தாகக் குறைத்துக் கூறும் கூறுபாட்டால் தொடர் சொல் ஈரெழுத்துப் பதமும் ஓரெழுத்துப் பதமுமாகச் சுருக்க மெய்திப் பலபொருள் தோன்றுவதாய் வரத் தொடுப்பது அக்கரச் சுதகமாம்.

“ஒளி கொண்ட புத்தூருறை கோதை தீந்தேன் றுளி கொண்ட பூந்துளபத்தோன்றலற்கீந்த

தளிகொண்டதையணிந்ததன்றதனைப் பற்றல் களிவண்டிமிர் தேங்கமழ் வாசிகை சிகை கை.

(இ.ள்) புகழைப் பெற்று திருவில்லிப்புத்தூருறையுங் கோதை சூடிக் கொடுத்தாள், இனிய தேன் துளிக்குஞ் செய்கையைக் கைக் கொண்ட பூவோடு கூடிய துளவ மாலிகையையுடைய பெரியோனுக் களித்ததுவுமதனைச் சூடியதும் (திருப்புகழ்) அதனைப் பற்றியதும் புலவீர்கள்! கூறுங்காலத்துத் தேனையுண்டு மகிழ்தலையுடைய வண்டுகள் முரலும் வாசிகை சிகை கையாம்.

வாசிகை-மாலை, சிகை - திருக்குழற்கற்றை. கை - திருக்கை.

அக்கரவர்த்தனம்

இருபது வகையான சித்திரக் கவிகளுள் ஒன்று. அஃது ஓரெழுத்தானொரு மொழியாய்ப் பொருட் பயந்து ஓரெழுத் தேற்றுப் பிறிதொரு மொழியாய்ப் பொருட்பயந்து, அவ்வாறு முறையானே ஏற்றவேற்ற வேறு வேறு மொழியாய்ப் பொருட் பயந்து வரப் பாடுவதாம்.

அக்கரவருத்தனை

ஒரு பொருள் தருகின்ற ஒரு தொடர் மொழியின் இறுதியில் ஓரெழுத்தினைப் பிரித்துப் பிறிதொரு பொருள்தர வைத்து அதன் மேல் ஒரோவெழுத்தாகப் பல பொருள் தோன்ற வைப்பது அக்கரவருத்தனையாகும்.