பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

அந்தாதி மடக்கு

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அடிதோறும் வரும் இறுதிச் சொல்லை யதன் மேல் வருமடிக்கு ஆதியாக (முதலாக) வரத் தொடுப்பது அந்தாதி மடக்காகும்.

எடு :-

"நாக முற்றவுங்களிதர நிறாதர் கோனாக

நாக மையிரண் டொருங்கறப் பொருதமைந் நாக நாகமூலமென்றழைத்த கார்துயிலிட நாக

நாகமொய்த்த பூம் பொழிற்றிருநாகை யென்னாகம்.

அபாவவேது

ஒன்றனது இன்மையைக் கூறுவது அபாவவேதுவாகும். அதுவும் ஞாபகவேதுவின் பாற்படும். இது, என்றுமபாவம், இன்மையதபாவம், ஒன்றினொன்றபாவம், உள்ளதனபாவம், அழிவு பாட்டபாவம் என ஐந்து வகைப்படும்.

அயுத்தவேது

துவும் ஏதுவணியின் பாற்படும்.

காரணத்திற்குப்

பொருத்தமில்லாத காரியம் நிகழ்வது அயுத்தவேதுவாகும். (அயுத்தம் பொருத்தமின்மை.)

எடு :-

-

இகன்மதமால் யானை யநபாய னெங்கோன் முகமதியின் மூர னிலவால் - நகமலர்வ செங்கயற்க ணல்லார் திருமருவு வாள்வதன பங்கயங்கள் சாலப் பல

இங்கே, தாமரைகளின் மலர்ச்சியாகிய காரியத்திற்கு நிலாக் கிரணம் பொருத்தமில்லாத காரணமாதலின், தாமரை மலர்ச்சிக்குச் சூரியகிரணமே பொருத்த காரணம்.

அரதனமாலையணி

சொல்லத் தொடங்கிய பொருள்களை முன்பின் முறை இதனை வடநூலார்

வழுவாது வரச்

சொல்லுதலாம்.

இரத்நாவளியலங்கார’ மென்பர்.