பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“மன்றற் குழலா ருயிர்மேன் மதன்கடவும்

தென்றற் கரிதடுக்குந் திண்கணையம் மன்றலரைக் கங்குற் கடலிற் கரையேற்று நீள்புணையாம்

பொங்குநீர் நாடன் புயம்.

அற்புதவணி

வியப்புத் தோன்று முண்மையினால் பாடுவது அற்புதம்

என்னும் அணியாம்.

எடு :-

“உண்ணீர்மையற்றவர்க் கண்டாலவர் மன்னுயிர்க்கிரங்கிக்

கண்ணீர் பனிற்றும் புயன்மனுராமன் கைக் கொள்வதொன்றோ வெண்ணீர்மையுற்ற நிருதரைச் சால வெறுத்தவர் மேற் புண்ணீர் பனிற்றச்சரமாரியன்று பொழிந்ததுவே.

ஆர்வமொழியணி

உள்ளத்தில் நிகழ்ந்த ஆர்வம்பற்றி நிகழும் மொழி மிகத் தோன்றச் சொல்வது ஆர்வமொழி என்னும் அணியாம்.

ஏடு

“சொல்ல மொழிதளர்ந்து சோருந் துணைமலர்த்தோள்

புல்ல விருதோள் புடைபெயரா - மெல்ல

நினைவோ மெனினெஞ் சிடம் போதா தெம்பால் வனைதாராய் வந்ததற்கு மாறு

இகழ்ச்சி விலக்கு

6

விலக்குதற்குக் காரணமாகிய பொருளை இகழ்ந்து குறிப் பினால் விலக்குவது இகழ்ச்சி விலக்கு என்னும் அணியாம். எடு :-

66

'ஆசை பெரிதுடையே மாருயிர்மே லப்பொருண்மேல் ஆசை சிறிது மடைவிலாமல் - தேசு

வழுவா நெறியின் வருபொருண்மே லண்ணல் எழுவா யொழிவா யினி”

இகழ்ச்சியணி

ஒன்றன் குணகுற்றங்களால் மற்றொன்றற்கு அவை உள வாகாமையைச் சொல்லுவது இகழ்ச்சியென்னும் அணியாம்.