பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பெரியோரும் பேணாது செய்வாரே போலும்

சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு”

இதில் சிறியோர் பிறர்க்குத் தெளியாமல் தீங்கு செய்தலாகிய கூடுமியற்கையும், பெரியோர் பிறர்க்குத் தெளியாமல் தீங்கு செய்த லாகிய கூடாமையும் ஒருங்கு வந்தன.

இ இல்பொருளுவமை

இஃது உவமை வகைகளுள் ஒன்று. முன்பு உலகியலில்

இல்லாத

பொருளினை

இல்பொருளுவமையாம்.

எடு :-

உவமையாக்கிப்

“எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின் வில்லேர் புருவத்து வேனெடுங்கண் - நல்லீர் முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும் அகம்போலு மெங்க ளகம்”

இலேசவணி : (அ)

பாடுவது

குற்றத்தைக் குணமாகவும், குணத்தைக் குற்றமாகவுஞ் சொல்லுதல் இலேசவணியாகும்.

இலேசாலங்கார’மென்பர்.

இதனை

வடநூலார்

எடு :-

“பறவைக ளெலாமனப் படியே திரிதரக்

குறைவிலிக் கிளிக்குக் கூட்டுச்

சிறைதீங் கிளவியிற் சேர்பய னாமே"

இஃது, அரசனுக்கு இனியனாய்த் தன்னைவிட்டு நீங்கி டு அவன் புறத்து நெடுநாட்களாகத் தங்கியிருக்குங் கல்வி சான்ற புதல்வனைப் பார்ப்பதற்கு விரும்பிய தந்தையாற் சொல்லப் பட்டது. இதில், மதுரச் சொல்லாகிய குணம் பஞ்சரச்சிறைக்குக் காரணமாகையாற் குற்றமாகவும், மதுரச் சொல் இல்லாமை யாகிய குற்றம் வேண்டியவாறு திரிதற்குக் காரணமாகையாற் குணமாகவுஞ் சொல்லப்பட்டது.

இலேசவணி (ஆ)

உள்ளத்தில் கருதியதை வெளிப்படுக்குஞ் சத்துவமாகிய குணங்களைப் பிறிதொன்றால் நிகழ்ந்தனவாக மறைத்துச் சொல்வது இலேசவணியாகும்.