பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கழிப்ப யோதர மேன்மையைக் கண்டுதான்

இழுக்க லின்றி யிருப்பை யெனிலிராய்.’

இஃது படுக்கை முதலிய விரும்புகின்ற ஒருவழிப் போக் கனைக் குறித்து மங்கை கூறியகூற்று. இதில் பயோதர பதச் சிலேடையினால் கலவி செய்ய விரும்புவாயாகில் இவ்விடத்திலிரு மூடமக்கள் இருக்கின்ற இக்கிராமத்தில் நமது க்கிராமத்தில் நமது செய்கையை ஒருவரும் அறிந்து கொள்ளமாட்டார் என்ற அடங்கியிருக்கிறது. (பயோதரம் - மலை, மார்பு.)

இன்மை நவிற்சியணி

கருத்தும்

யாதேனும் ஒன்றன் இன்மையால் உவமேயப் பொருள் உயர்வோ, தாழ்வோ அடைந்ததாகக் கூறுதல் கூறுதல் இன்மை நவிற்சியணியாகும்.

எடு :-

“மறங்கொள் கொடியோரி லாமையி னெம் மன்னா

சிறந்துளதுன் பேரவைச் சீர்”

இதில், தீயோர்

இல்லாமையினால்,

அவைக்களச் சிறப்புக் கூறப் பெற்றிருத்தலை அறிக.

இன்மையத பாவம்

அரசனது

இதுவும் அபாவவேதுவின் பாற்படும். இல்லாமையினது இன்மையைக் கூறுவதாம்.

எடு :-

66

'காரர் கொடிமுல்லை நின்குழற்மேல் கைபுனைய வாராமை யில்லை வயவேந்தர் - போர்கடந்த வாளையேய் கண்ணி! நுதன்மேல் வரும்பசலை நாளையே நீங்கு நமக்கு.'

இன்சொலுவமை

இது உவமை வகைகளுள் ஒன்று. ஒன்று. உவமேயத்தினும் உவமைக்கொரு மிகுதி தோன்றக் கூறியுவமித்து, இன்ன மிகுதியைப் பெற்றிருந்தாலும் பொருளை ஒப்பதன்றிச் சிறந்தது அன்று என்று கூறுவது இன்சொலுவமையாகும்.