பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

435

எடு :-

66

“மான்விழி தாங்கு மடக்கொடியே! நின்வதனம் மான்முழுதுந் தாங்கி வருமதியம் - ஆனாலும் முற்றிழை நல்லாய்! முகமொப்ப தன்றியே மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு.

இன்பவணி

எடு :

66

இவ்வணி மூன்று வகைப்படும்.

(1) முயற்சியின்றி விரும்பப்பட்ட காரியம் முடிதல்.

“தன்னா யகன்விழைந்த தையலையே தூதாக

அன்னான்கண் உய்த்தாள் அணங்கு.

(2) விரும்பப் பட்ட பொருளினும் அதிகமாகிய பொருள் சித்தித்தல். (கைகூடுதல்)

எடு :-

“மழுங்குவிளக் கைத்தூண்ட மங்கை யெழும்போது

செழுங்கதிர்தோன் றிற்றிருள்கால் சீத்து.

(3) உபாயம் முடிதற்பொருட்டுச் செய்யும் முயற்சியாற் பலமே சித்தித்தல். (கைகூடுதல்)

எடு

“தங்கு நிதியஞ் சனமூ லிகையகழ்ந்தோன்

அங்குநிதி யேகண்டா னன்று.

ஈற்றடி முதன் மடக்கு

செய்யுளின் ஈற்றடியில் முதலில் நின்ற ஒரே சொல் மடங்கி வந்து வேறு வேறு பொருள் வரத் தொடுப்பது ஈற்றடி முதன் மடக்கு என்னும் அணியாம்.

எடு :-

இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ தோயும் கவள மதமான் கடத்திற் - றிவளும்

மலையார் புனலருவி நீயணுகா நாளில்

மலையா மலையா நிலம்.