பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

447

எடு :-

"மன்னிவன்கண் காதளவுங் காதுதோண் மட்டியையுந் துன்னுறுதோள் சானுத் தொடும்.'

இதில் கண் முதலியன விசேடியம்.

நிறைவெளியு மதியிலங்கு தினகரனு

மவன்கதிர்சேர் நிலவு மன்னோன்

குறைவில்பிறப் பிடமாய புனலுமத னதுபித்தக் கூறாந் தீயும் அறைநெறியி னதனிலவி வழங்குபுரு டனுமவற்குப் பிராண னாகி உறைவளியு மதுகொண்மண முறுநிலனு மாமிறையெட் டுருவுட் கொள்வேம்.

தில், வெளிமுதலியன விசேடணம்.

ஏதுவணி : (அ)

யாதானும் ஒரு பொருளிடத்து இதனான் இது நிகழ்ந்த தென்று காரணம் விதந்து கூறுவது ஏதுவென்னும் அணியாம். இவ்வணி காரகவேது என்றும் ஞாபகவேது என்றும் இரண்டு வகைப்படும். இதனை வடநூலார் 'ஹேத்வலங்கார’ மென்பர். எடு :-

“எல்லைநீர் வையகத் தெண்ணிறந்த வெவ்வுயிர்க்கும் சொல்லரிய பேரின்பந் தோற்றியதால் - முல்லைசேர்

தாதலைத்து வண்கொன்றைத் தாரலைத்து வண்டார்க்கப் பூதலத்து வந்த புயல்.

ஏதுவணி - ஆ

எடு

(1) காரணத்தைக் காரியத்துடன் சேர்த்துச் சொல்லுதல்.

பெருந்திங்கள் தோன்றுமே பெய்வளையார் நெஞ்சில் பொருந்தூடல் தீர்த்தற் பொருட்டு.

இதில், ஊடல்தீர்த்தல் - காரியம். தோன்றுதல்

-

காரணம்.

(2) காரணத்தையும் காரியத்தையும் வேறுபடுத்திக் கூறுதல்.