பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

இளங்குமரனார் தமிழ்வளம் 4

இதில், உவமானமாகிய சாதகப்புள் சாதகப்புள் வருணனையில் அதற்கு ஒப்பாகிய ஒரு மன்னனைச் சேர்ந்து பிறரை இரவாத மானியின் செய்தியாகிய உவமேயந் தோன்றிற்று.

ஒட்டணி

புலவன், தன்னால் கருதப்பட்ட பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்தற்குத் தக்க வேறொன்றினைச் சொல்லின் அது ஒட்டென்னும் அணியாகும். இது உவமைப் போலி எனவும், பிறிது மொழிதல் எனவும், நுவலா நுவற்சி எனவுங் கூறப்படும். இவ்வணி அடையும் பொருளும் அயல்பட மொழிதல், அடையைப் பொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல், அடைவிரவிப் பொருள் வேறுபட மொழிதல், அடையை விபரீதப் படுத்திப் பொருள் வேறுபட மொழிதல் என நால்வகையானும் வரும். இந்நால் வகையே யன்றி, பொருள் இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகையானும் இவ்வணி வரும்.

எடு :-

“வெறிகொ ளினச்சுரும்பு மேவியதோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந் துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைபிரிந்த வண்டு.

இதனுள், தாமரை யென்றது தலைமகளை; காவி என்றது பரத்தையை; வண்டாமரை பிரிந்த வண்டென்றது தலைமகனை. இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்கு வாயினேர்ந்த தோழி சொல்லியது.

ஒருங்குடன் தோற்றவேது :

இதுவும் ஏதுவணியின் பாற்படும். காரணமுங் காரியமும் ஒருங்கே நிகழ்வது ஒருங்குடன் தோற்றவேதுவாகும்.

எடு :-

“விரிந்த மதிநிலவின் மேம்பாடும் வேட்கை புரிந்த சிலைமதவேள் போரும் - புரிந்தோர் நிறைதளர்வு மொக்க நிகழ்ந்தனவா லாவி பொறைதளரும் புன்மாலைப் போழ்து.