பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கற்றோர் நவிற்சியணி

‘பிரௌடோத்தி

மிகுதிக்குக் காரணமாகாததை அதற்குக் காரணமாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் யலங்கார‘ மென்பர்.

எடு :-

"தக்கவிவள் கண்யமுனை தன்னில் அலர்குவளை

ஒக்குங் கருமை உள.

காட்சியணி : (அ)

கண் முதலிய ஐம்புலன்களால் அறியப்படும் செய்திகளைக் கூறுவது காட்சியணியாகும். சுட்டணி, நிதர்சனஅணி என்பனவும் இது.

எடு :-

66

இந்தியத்தின் குழுவனைத்து மேபிரதி விம்பமுறு

தந்தலைவன் முகத்ததுதே மாமரத்தின் றளிர்மணத்த துந்துருசி யது அரும்ப ரொலிப்புளது சீதளநி

வந்ததெனக் களிமதுவால் வளரின்பமடைந்ததுவே."

காட்சியணி : (ஆ)

உவமான உவமேயங்களாகவிருக்கிற இரண்டு வாக்கியங் களின் பொருள்களை யொன்றாகக் கூறுவது காட்சியணியாகும். எடு :-

66

அறிவிலா மூர்க்கன் றனையனு சரித்தல் யாதது வாரணியமதி லழுகையுற் றிடுத லாவியிலுடலை யழகுறும் படிதுடைத்திடுதல் செறிபுன லறுபா ரதிலர விந்தத் தினையா ரோபமே புரிதல் தினந்தின மூவரா நிலந்தனில் வருடஞ் செய்குத னாயது வாலை நெறியுறத் திருத்தல் முழுச்செவி டாம னிதனது செவியின்மந் திரத்தி னிகழுப தேசம் புரிகுதல் குருடாய் நேர்பவ னானனத் தெதிரே உறுநிழ லாடி காட்டுத லெனவே யுளங்கொடுசற்சன சங்கத்

தொடுநித மிருந்தே செவியுணும் விருந்தே யுறிலது பலவினை மருந்தே.”

இதில், அறிவில்லா மூர்க்கனை யனுசரித்தல் என்ற உவமேய வாக்கியப் பொருளுக்குக் காட்டில் அழுகை யுற்றிடுதல்