பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

469

சிலேடை குறிப்பினாற் கொள்ளப் படுதலால் ஈரணியாதலா னென்க.

சங்கீரண வணி

அணிகள் பலவுந் தம்முட் பொருந்த உரைப்பது சங்கீரணம்

என்னும் அணியாம்.

எடு :-

66

'தண்டுறைநீர் நின்ற தவத்தா லளிமருவு

புண்டரிக நின்வதனம் போன்றதால் - உண்டோ பயின்றா ருளம்பருகும் பான்மொழியாய் பார்மேல் முயன்றான் முடியாப் பொருள்.

99

இதனுள், “தண்டுறை நீர் நின்ற தவம்” என்பது தற்குறிப் பேற்றம் “தவத்தால்” என்பது காரகவேது “அளிமருவு என்பது சிலேடை “புண்டரிகம் நின்வதனம் போலும்” என்பது உவமை ‘உண்டோ முயன்றால் முடியாப் பொருள்' என்பது வேற்றுப் பொருள் வைப்பு. 'உளம் பருகும் பான் மொழியாய்' என்பது சுவை.

இப்பாட்டிற்கு இவ்வண்ணமே பல அணிகளும் காண்க.

சமவனி

ருமொழியும், பலமொழியும் தம்முள் மாத்திரையானும் ரேழுத்தானும் வேறுபாடு இல்லாமல் தம்முள் ஒப்ப வருவது

சமவணி எனப்படும்.

எடு :

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமா நீர்நிலையோர் புள்ளிபெற நெருப்பாஞ் - சீரளவு பாட்டொன் றொழிப்ப விசையா மதனளவு மீட் டொன் றொழிப்ப மிடறு.

சமாகிதவணி

وو

து

முன்பு தன்னால் முயலப்பட்ட தொழிலினது பயனானது அத்தொழிலாலன்றிப் பிறிதொன்றால் நிகழ்ந்ததாகக் கூறி முடிப்பது சமாகிதவம் என்னும் அணியாம். (சமாகிதம் - துணைப் பேறு.)