பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

"அருவியங் குன்ற மரக்கன் பெயர்ப்ப

வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான் அணியாக மாரத் தழுவினா டான்முன் தணியாத வூட றணிந்து.”

சமாதானவுருவகம்

து உருவக அணிகளுள் ஒன்று.

ஒரு பொருளை நன்றாக உருவகஞ்செய்து, அதனையே தீங்கு தருவதாகக் கூறி, அத்தீங்கும் அப்பொருளாலே வருகின்ற தன்று என்பதற்குப் பிறிதோர் காரணங்கூறித் தொடுப்பது சமாதானவுருவகம். இதனை நட்புருவகமென்பார் மாறனலங்கார முடையார்.

எடு :-

66

கைகாந்தள் வாய்குமுதங் கண்ணெய்தல் காரிகையீர்!

மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம் – இவ்வனைத்தும் வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன்

றின்மையே யன்றோ வெமக்கு.

சமுச்சயவுவமை :

இஃது உவமை வகைகளுள் ஒன்று. அதனை யொப்பது தனா னே யன்றி இதனாலும் ஒக்கும் என்பதாம்.

எடு :-

66

அளவே வடிவொப்ப தன்றியே பச்சை

இளவேய் நிறத்தானு மேய்க்கும் - துளவேய் கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரம் தொலைக்குமரி யேறுகைப்பா டோள்.'

சமுச்சியவணி : (அ)

99

ஒரு பொருட்கு இன்பமாதல் துன்பமாதல் உற்றதை யொன்றொன்றாயே கூறாது பலவாகக் கூறுவதுஞ் சமுச்சியம் என்னும் அணியாம்.