பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

479

தலைதடுமாற்றவுவமை

முதலில் வந்த உவமப்பொருள் இடையிலும், இறுதியில் வந்த உவமேயப் பொருள் முதலிலும், இடையினின்ற வுவமவுருபு இறுதியில் தொக்கதும் விரிந்ததுமாகப் புணர்த்துப் பாடுவது தலைதடுமாற்றவுவமையாம்.

எடு :-

66

'மையமருண்கண் காவி வாய்பவளந் தோளிணைவே யைய விடைநுண்ணூ லகலல்குல் - பையரவங்

கஞ்சத் திருமாது காதலிக்கு மார்பகத்தான் றஞ்சைத் திருமான் றனக்கு.'

தற்குறிப்பேற்ற வணி

وو

பெயரும் பொருளும் பெயராத பொருளும் என்னும் இரண்டு பொருட் கண்ணும் இயல்பாக நிகழும் தன்மையை நீக்கிப் புலவன் தான்கருதிய வேறொரு தன்மையினை அவற்றின் கண் ஏற்றிக் கூறுவது தற்குறிப் பேற்றம் என்னும் அணியாம். இவ்வணி அன்ன போல என்பவை முதலாகிய சில உவமைச் சொல் புணர்ந்து விளங்குந்தன்மையுடையது.

எடு :-

66

'மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்

வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉம்

தேயுந் தெளிவிசும்பி னின்று.

தற்குணவணி

யாதாயினும் ஒரு முக்கியப் பொருளினது குணத்தைச் சார்ந்த விடத்து அக்குணத்தை மற்றொரு பொருள் பற்றுதல் தற்குணம் என்னும் அணியாம்.

எடு :-

'காமர் திருப்பாற் கடலுங் கருங்கடலா

நாமந் தனைப்பயிலு நாடோறும் - பூமடந்தை சீர்மேனி யைத்தழுவுந் தேவேச னாகணையான் கார்மேனி வண்ணங் கவர்ந்து.”