பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

கண்ணின் மேற் செல்லுங்கால்

-

497

மது - கள். செவிமருவி - செவியளவுஞ்சென்று, செந்நீர்மை சிவந்தகுளிர்ச்சி. மேவலார் புணராத்தலைவர். இன்னுயிர்

இனிய உயிர்.

-

-

இது நீண்டு, மருவி என்பன முதலிய பலவினைபற்றி வந்தமை காண்க.

பலபொருளுவமை

இஃது உவமை வகைகளுள் ஒன்று. ஒரு பொருட்குப் பல வுவமை காட்டுவது பலபொருளுவமையாம்.

எடு :-

“வேலுங் கருவிளையு மென்மானுங் காவியும்

சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும் - போலுமால் தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற் காமருவு பூங்கோதை கண்.

பலபொருளுருவகம்

இஃது உருவக அணி வகைகளுள் ஒன்று. உயர்திணை அஃறிணை யென்று சொல்லப்பட்ட காட்சிப் பொருளுங் கருத்துப் பொருளும் ஒரு செய்யுளகத்து வந்தால் அவ்விரு பொருளையும் உருவகஞ் செய்து தொடுப்பது பலபொருளுருவக மாகும்.

L

எடு :-

"தீதற்ற மெய்ஞ்ஞானத் தெப்பமுடன் மேதகுநாள் வேதக் கடல்கடந்த வித்தகத்தாற் - கோதற்ற

வந்தாமத் தீவினுட் புக்காழியா ணாமணியைத் தந்தானம் பூதூர்வந் தான்.

பாவகக் கலவையணி

பலகருத்துகள் மேன்மேலாக வுண்டாவது பாவகக் கலவை

யணியாகும்.

எடு :-

“செயத்தகைமையில்லாத வீதெங் கேசந்

திரகுல மெங்கேயினுநா மிவட்காண் போமோ