பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

இளங்குமரனார் தமிழ்வளம் 4

இதில் வெல்லுவதற்கு ஏதுவாகிய அம்பிலே திண்மையுங் கூர்மையுங் குறைவாம்.

(3) காரியம் பிறத்தற்குத் தடையுளதாகவும் அது பிறத்தலைச் சொல்லுதல்.

எடு

66

"அடுத்த நின்பிரதாப வருக்கனீர்

உடுத்த பார்மிசை மன்னவ வொண்குடை விடுத்த வேந்தரை விட்டுவி டாதுமேல் எடுத்த வேந்த ரினத்தைக் கனற்றுமே.

தில், பாதுகாப்பான குடை குடை இருப்பவுஞ் சுடுதலாகிய காரியம் பிறந்தது.

(4) காரணமல்லாத மற்றொன்றாற் காரியம் பிறத்தலைச் சொல்லுதல்.

எடு

66

“வழுவாத மானிவள்பால் வண்சங்கி னின்றும்

எழுமேநல் யாழி னிசை.”

(5) பகையாகிய காரணத்தினின்றுங் காரியம் பிறத்தலைச் சொல்லுதல்.

எடு :-

எடு :-

சீர்தரு சோமன் பொழிசீ தளக்கதிர்கள்

சோர்தரவெம் மாதைச் சுடும்.

(6) காரியத்தினின்றும் காரணம் பிறத்தலைச் சொல்லுதல்.

“மற்பெருவள் ளாலுதித்த தேர்பெறுநின் வண்கையெனும்

கற்பகத்திற் சீர்ப்பாற் கடல்.

தில் சீர்ப்பாற்கடல் என்பது புகழாகிய பாற்கடல்

பிறிதின் குணம் பெறலணி

ஒரு பொருளானது தன்குணத்தை இழந்து பிறிதொன்றின் குணத்தைக் கவர்தலாம். இதனை வடநூலார் வடநூலார் 'தத்குணா லங்கார' மென்பர்.