பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

இளங்குமரனார் தமிழ்வளம் 4

வளாகிய அவளைவிட்டு அச்சமுறுத்தும் பரத்தைபாற் செல்லுந் தலைவன் நிந்தையாகிய மற்றோருவமேயந் தோன்றிற்று.

பெருமையணி : (அ)

இவ்வணியை வடநூலார் ‘அதிகாலங்கார’ மென்பர். இது இரு வகைப்படும்.

(1) பெரிய ஆதாரத்தினும் ஆதேயத்தைப் பெரிதாகச் சொல்லுதல். ஆதாரம் - அடி; ஆதேயம் -தாங்கப்படுவது. எடு :-

“உலக முழுதடங்கு மாவிசும்பில் உன்றன்

அலகில் குணமடங்கா வாம்.’

وو

(2) பெரிய ஆதேயத்தினும் ஆதாரத்தைப் பெரிதாகச் சொல்லுதல்.

எடு :

“மன்சீர் உலகெவ் வளவுபெரு மைத்தளவில்

உன்சீ ரடங்கி உள.

பெருமையணி ; (ஆ)

ஒன்றனுடைய பெருமையைக் கேட்போர் வண்ணங் கூறுவது பெருமையென்னும் அணியாம்.

எடு :-

66

‘உலக முழுதடங்கு மாவிசும்பி லுன்றன் அலகில் குணமடங்கா வாம்.

பொதுப் புனைவிலி புகழ்ச்சி

வியக்கும்

இது புனைவிலி புகழ்ச்சியணி வகைகளுள் ஒன்று. அவருணய மாகிய பொதுப் பொருளால் வருணியமாகிய சிறப்புப் பொருள் தோன்றுதல்.

எடு

“மைந்தகேள் கல்வி வளமுணரா மாந்தரெலாம் அந்தகரே யாவ ரவர்வடிவில் - சந்தம்

தவழ்திரைக ளார்த்தெழூஉந் தண்கடல்சூழ் வையத் தவிழ்முருக்கம் பூவினிற மாம்.'