பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

மாலையணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

காரணகாரியத் தொடர்புடன் சொற்கள் நடப்பதில்

மாலை அணி அமையும்.

எடு :-

66

நீதியால் செல்வமும் செல்வத்தாற் கொடையும்

கொடையாற் சீரும் உள.

99

தில், நீதி செல்வத்திற்கும், செல்வம் கொடைக்கும், கொடை சீருக்கும் காரணமாதலையறிக.

மாலை விளக்கணி

தீபகத்தையும் ஏகாவளியையும் சேர்த்துச் சொல்லுவது

மாலை விளக்கணியாகும். இதனை தீபகாலங்கார’ மென்பர்.

எடு :-

66

"மனைக்கு விளக்க மடவாள் மடவாள்

தனக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விதனக்

கோதிற் புகழ்சால் உணர்வு.'

வடநூலார்

"மாலா

இதில், எல்லா வாக்கியங்களுக்கும் விளக்கமென்னும் ஒரு சொல் முடிபாய் வருதலால் தீபகவிதியும், மடவாள் முதலிய வற்றை முன்முன்னாக வரும் மனை முதலியவற்றிற்கு விசேடியங் களாகச் சொல்லுதலால் ஏகாவளி விதியும் வந்தன.

மாலையுவமை

இது உவமை வகைகளுள் ஒன்று. ஒரு பொருட்குப் பல வுவமை வந்தால் அவை ஒன்றி னொன்றிடைவிடாது தொடர்ச்சி யுடையவாகப் புணர்த்து இறுதிக்கண் பொருள் கூட்டி

முடிப்பது மாலையுவமையாம்.

எடு

66

மலையத்து மாதவனே போன்று மவன்பால்

அலைகடலே போன்று மதனுட் - குலவும் நிலவலயமே போன்று நேரியன்பா னிற்கும் சிலைகெழுதோள் வேந்தர் திரு."