பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எடு :-

66

‘புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்

சிறந்த வொளிவளர்க்குந் தேரோன் - மறைந்தான் புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார்.”

முறையிலுயர்வு நவிற்சியணி

இதுவும் உயர்வு நவிற்சியணி வகைகளுள் ஒன்று. காரணமுங் காரியமும் ஒரே காலத்தில் நிகழ்வனவாகச் சொல்லுதலாம். எடு :-

“மன்னநின் கணையு மொன்னலர் கூட்டமும்

ஏககா லத்தினா ணிகந்தோ டினவெனில் உன்புகழ்த் திறத்தினை யுணர்ந்து

மன்பதை யுலகுள்யார் பாடவல் லாரே.

இதில், அம்பினது தாக்குகையாகிய காரணத்திற்கும் அரசர்களின் ஓட்டமாகிய காரியத்திற்கும் முன்பின் தோன்றுந் தன்மையினால் ஒரு காலத்திலுண்டாகுகை கற்பிக்கப்பட்டது. முறையிற் படர்ச்சியணி

முறையாக ஒருபொருள் பல இடங்களிற் சென்றை தலையேனும், ஓரிடத்திற் பலபொருள் சென்றடைதலையேனுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் 'பரியாயாலங்கார'

மென்பர்.

எடு :-

"நஞ்சமே நீ பண்டை நாளி னதிபதிதன்

நெஞ்சிலிருந் தாங்கதன்பி னீங்கியே - செஞ்சடிலச் சங்கரனார் கந்தரத்திற் சார்ந்திக் கொடியோன் வாய்த் தங்குதியிக் காலந் தனில்.

எனவும்,

"முன்னா ளிருவர்க்கும் யாக்கையொன் றாகமுயங்கினம்யாம் பின்னாட் பிரியின் பிரியையென் றாயினம் பேசலுறும் இந்நாட் கணவன் மனைவியென் றாயின மெண்ணினினிச் சின்னாளி லெப்படி யோமன்ன நீயிங்குச் செப்புகவே.

>