பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

இளங்குமரனார் தமிழ்வளம்

4

செஞ்சொற்பரிதிவலம் பயில்விண் போவென்றேன் பொற்சிலம் பென்றான் வஞ்சர்க்கிரங்காவரங்கனுக் கென்மாலெப்படியே மொழிவனே.’

வஞ்சகவொழிப் பணி

99

இது ஒழிப்பணிவகைகளுள் ஒன்று. வஞ்சகம், கவடம் பெயர் முதலிய சொற்களால் உவமேயத்தினது தருமத்தை மறுத்தல்.

எடு :-

“இம்மடந்தை கட்கடை நோக் கென்னும் பெயரினைக்கொண்

டம்மதவேள் வாளி யடும்.

வஞ்சப் பழிப்பணி

நிந்தையினால்

நிந்தை

தோன்றுதலாம். இதனை

வடநூலார் 'வியாஜநிந்தாலங்கார’ மென்பர்.

எடு :-

6

"நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமருந் தவறிலர்

நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்

பறையறைந் தல்லது செல்லற்க வென்னா இறையே தவறுடையான்.”

இதில், இறைவன் நிந்தையால் தீச் செய்கையுடைய மற்றொருவர் நிந்தை தோன்றிற்று.

வல்லோ ரொழிப்பு

இது ஒழிப்பணி வகைகளுள் ஒன்று. பிறர் ஐயமுற்று வினவிய தஞ்சொல்லின் உண்மைப் பொருளை வல்லோர் அச்சொல்லுக்கு மற்றொரு பொருளைக் கற்பித்து மறுத்தல். எடு :-

"இலங்கயிற்க ணாளிகுளைக் கென்காலைப் பற்றிப் புலம்பியதுண் டென்று புகல - விலங்கியயல்

நின்றுவரு மற்றொருத்தி நின்கணவ னோவென்ன அன்றுசிலம் பென்றா ளவள்.'

99