பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

வினாவுத்தரம்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

வினாவினதொரு சொற்றொடரைப் பிரித்து அவ்வாறு பிரித்த சொல் தோறும் வினாயதற்கு விடையாகச் சொற்பொரு ளுரைத்து இறுதியில் அவ்வினாயதற்கு விடையான அச்சொற் றொடர் முழுவதும் ஒரு பொருளாக்கியுரைப்பது வினாவுத்தர மாகும்.

எடு :-

66

‘பூமகள் யார்? போவானை யேவுவா னேதுரைக்கும்

நாமம் பொருசரத்திற் கேதென்பர்? தாமழகின்

பேரென்? பிறைசூடும் பெம்மா னுவந்துறையுஞ்

சேர்வென்? திருவேகம் பம்.

இதனுள், ‘பூ மகள் யார்?' ‘திரு” எனவும்; 'போவானை ஏவுவான் ஏதுரைக்கும்?” ‘ஏகு’ எனவும்; ‘நாமம் பொருசரத்திற் கேதென்பர்? 'அம்பு' எனவும்; 'அழகின் பேரென்?' 'அம்' எனவும் கூட்டித் ‘திருவேகம்பம்' எனக் கொள்க.

(கு.ரை) திரு+ஏகு+அம்பு+அம்=திருவேகம்பம்.

விளக்கணி

உவமேயங்களும் உவமானங்களும் ஒரு வினையால் முடிவது விளக்கணியாகும். இதனை வடநூலார் 'தீபகாலங்கார' மென்பர். எடு :-

66

ஆதபத்தாற் சூரி யனும்பிரதா பத்தினால்

மேதகுவேந் தும்விளங்கு மே.”

இதில், சூரியனும் வேந்தனும் விளங்குதலாகிய ஒரு வினையால் முடிந்தன.

வினைமுதல் விளக்கணி

ஒரு வினைமுதலைச் சேர்ந்த முறையுள்ள பல செய்கை களை முறை பிறழாமற் சொல்லுதலாம். இதனை வடநூலார் 'காரக தீபகாலங்கார' மென்பர்.

எடு :-

"துயில்கின்றான் வாசநீர் தோய்கின்றான் பூசை

பயில்கின்றான் பல்சுவைய உண்டி - அயில்கின்றான்