பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் 40

ஆதலால், கேள் போல் பகையாய்ச் செயல்படுவார்க்குச் செவி தாராமை மட்டும் நெறிக்காவலாகாது. புறக்கணித்தல் மட்டும் கூடக்காவலாகாது! கண்டித்தலும் கட்டாயம் வேண்டும்!

66

உண்மை உணர்த்தி ஒழுங்குறுத்தல்" என்னும் உயர் நோக்கிலேயே கண்டித்தல் இனிய நூற்காப்பாகும்! கண்டித்தல் புண்படுத்தல் அன்று! பண்படுத்தல் ஆகும்! வருந்தக் கூறுதல் ஆகாது! திருந்தக் கூறுதலாகும்!

திருக்குறள் வாழ்வினரும் அதனைச் செய்யாக்கால், எவரே

செய்ய முன்வருவார்?