பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

117

வன்முறையால் வன்முறை இன்றன்று. என்றுமே தடுத்து விட முடியாது!

வன்முறையைத் தடுக்க வழியென்ன?

வன்முறை ஏன் வெடிக்கிறது? வன்முறையாளர் ஏன் அவ்வன்முறையை மேற்கொண்டனர்?

அவர் பிறக்கும் போதே வன்முறையாளராகப் பிறந்தாரா? அவர் எதனால் வன்முறையை மேற்கொண்டார்?

வன்முறை அவரே கொண்டதா? வன்முறைக்கு அவர் தள்ளப்பட்டாரா?

அவரை வன்முறைக்குத் தள்ளியவர் எவர்?

வன்முறையைத் தடுக்க ஆணையிடுபவர். வன்முறையைத் தூண்டாதவரா? வன்முறையை ஒடுக்க நடவடிக்கை எடுப்பவர் வன்முறைக்கு வித்திடாதவரா? வன்முறையைத் தண்டிக்க முந்துபவர், வன்முறையைக் கருதாத அறவோரா? அரசியல் - சமயம் - சாதி, கட்சி - காட்சி - கதை - செல்வம் - செல்வாக்கு - அலுவல் அதிகாரம் என்பனவெல்லாம் வன்முறையை மெய்யாகவே ஒழிக்கின்றனவா? ஒளிந்து ஒளிந்தோ, மறைந்து மறைந்தோ, தூண்டிவிட்டும் ஏவிவிட்டும், எடுத்துவிட்டும் வன்முறையை வளர்த்துக் கொண்டே வன்முறையைக் கொடுமையானது” என்று கூறி நடிக்கின்றனவா?

-

வாய்மை நெஞ்சம் பேசட்டும்! 'வன்முறை வன்முறை” என்று ஓல மிடுவார் உள்ளத்தையே வஞ்சாக வன்முறை கூடுகட்டி உறையக் காண்பர்!

நடவடிக்கை எடுப்பவர் - தண்டிப்பவர் - வன்முறையைத் தூண்டாத, வன்முறையைக் கருதியும் பாராத, அறவோராகத் தங்களை ஆக்கிக் கொள்ளாத நடிப்பாளராக போலிமை யாராக ருக்கும் வரை வன்முறை எப்படி ஒழியும்?

"வெளியே போ" என்றார் ஆசிரியர் ஒருவர்.

மாணவர் வகுப்பை விட்டு வெளியே போய்விட்டார்.

வெளித் தாழ்வாரத்தில் நின்றார் மாணவர்.

அங்கே போனார் ஆசிரியர்; "பள்ளிக்கூட எல்லையை விட்டுப்போ" என்றார்.