பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

“உங்கள் வகுப்பை விட்டுப் போகச் சொன்னீர்கள்! நான் கட்டுப்பட்டு வந்தேன். அடுத்த வகுப்புக்கு நான் இருக்க வேண்டும்; அதனால் நிற்கிறேன்" என்றார் மாணவர்.

"நீ மாணவனாக நடந்து கொள்ள வில்லை" என்றார் ஆசிரியர்!

"நீங்கள் ஆசிரியராக எப்பொழுது நடந்து கொள்ள வில்லையோ அப்பொழுது நான் மாணவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை எண்ணக்கூடாது" என்றார் மாணவர்.

அம்மாணவர் நிலையிலே பொது மக்கள் இருக்கிறார்கள்! அவ்வாசிரியர் நிலையிலே அதிகாரம், அரசியல், சமயம், தொழில், தலைமை ஆகியவை உள்ளன!

வன்முறையை நீங்கள் ஒழியுங்கள்! வன்முறையை நீங்கள் வளர்க்காதீர்கள்! வன்முறைக்கு நீங்கள் வித்திடாதீர்கள்! வன்முறை தானே ஒழியும்?

மேலும் ஒழியவில்லையா வன்முறை? நீங்கள் துணிந்து நடவடிக்கை எடுக்கலாம் - தூய நெஞ்சுடன், தூய நெறியுடன்! அப்பொழுது உங்கள் நெஞ்சையும் நெறியையும் கட்டாயம் நாடும் நன்னெஞ்சும் மதிக்கும் போற்றும்

-

வழிபடும் வழிப்படவும் ஆகும்.

-

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்பது வைக்கப் படும்”

-

வணங்கும் -

388

"இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்”

547 நம்மறை