பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

133

அந்நோக்குகளை அறிந்து நடைப்படுத்துதல், அப்பெரு மகனார் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றிய பெருமையையும், கடைப்பிடித்த பேற்றையும் அருளும்.

இந்நூலில் சுட்டப்பட்ட நோக்குகளை அன்றி ஆய்வாளர் பார்வையில் வேறு சில நோக்குகளும் தோன்றக்கூடும். அவ்வாறு தோன்றித் துலக்கப்படவும் நடைப்படவும் நோக்கிய நோக்கே "திருக்குறள் நோக்கு" என்னும் இந்நூல் தோற்றமுற்ற நோக்காம்.

நோக்கு குறளிய ஆசிரிய உரையாய்த் தொடர்ந்த பெற்றியது. பலப்பலரும் விரும்பிப் போற்றியது. அவற்றை ஒரு சேரப் பார்ப்பது பயன் செய்யும். நூலுக்குத் தகச் சில அமைப்புகள் மாறியுள்

திருவள்ளுவர் தவச்சாலை

அல்லூர் 620 101

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

அன்புடன்,

இரா. இளங்குமரன்

நிறுவனர் தவச்சாலை