பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பொது விளக்கம்

நோக்கு என்பது ஓர் அரிய பழந்தமிழ்ச் சொல்.

"நோக்கு என்பது செய்யுள் உறுப்புகளுள் ஒன்று" என்றார் ஆசிரியர் தொல்காப்பியர்.

"நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே'

என அதன் இலக்கணமும் வகுத்தார் அவர்.

'நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்பது ஓர் அகத்துறை.

நோக்கு விரிவுறும் நிலையில் “அம்” ஈறு 'நோக்கம்' ஆகும். ஒப்பு: கூடு + அம்= கூடம்.

ணைந்து,

ஒருவர் உள்ளகத்திலிருந்து எழும். உயரிய பதிவே -படிவே நோக்காக வடிவுறும். அந்நோக்கின் அடிமூலம், உள்ளகம் ஆதலால், அவரை அந்நோக்கில் இருந்து பிரித்தல் அரிது. நோக்கே உயிராகி உணர்வாகி நிற்பவர் அவர். உயிரொடு ஒன்றிய நோக்கினை ஒழித்தலோ, ஒதுக்கலோ எளிதில் இயலா. இத்தகைய நோக்கும் நோக்கமும் செவ்விதின் அமையின், அமைந்தார்க்கும் அவர் தம் செயற்பாடுகளுக்கும் சீர்த்தி பெருகும். அந்நோக்கு பிழை படின், அவர்க்கும் அவரைச் சார்ந்தார்க்கும் கழிபேரழிவாய் இழிவுறும். ஆதலால் நோக்கின் நலமும் பொலமும் அந்நோக்கின் விளைவில் விளங்கும்.

இப்பொழுது தம் மொழி, தம் வழி, தம் இனம் பற்றிய நோக்கில் பலப் பல நிலையரும், பலப்பல அறிஞரும் ஊன்றி யிருத்தல் உவகையளிப்பதாம். ஆனால், அவர் தம் நோக்கின் அடிமூலமாக இருக்க வேண்டுவது என்ன என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளல் கட்டாயத் தேவையாம்.

மண்ணில் பிறந்தது மணம் (மண்+அம்) மணத்தல் என்பது மணம் பரப்பல், கூடுதல், கலத்தல், பொருத்தல், நுகர்தல், துய்த்தல் இன்ன பல பொருள்களைத் தரும் விண்ணேறிப் பறந்தாலும் கால் ஊன்ற மண்ணே வேண்டும், ஊன்றும் இடம்