பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

139

ஏன், வழங்கு பெயரை வழங்கவில்லை? திருவள்ளுவர் வழங்கிய பெயர்களும் ஏன் பண்பியல்

பெயர்களாகவே அமைந்தன?

ஒழுக்கவியல்

“எந்தெய்வம் தந்தெய்வம் என்று எதிர்வழக்கிட" என்றாரே தாயுமானவர். அவ்வழக்காட்டுக்கா தெய்வப் பெயர் இடம் தர வேண்டுமா? ஆதலால் திருவள்ளுவர்,

CC

"இம் மண்ணின் நலம் கருதிப், பிளந்தும் பிரித்தும் பேசிப் பகையும் பிணக்கும் வளர்க்கும் பாழ் நெறியைப் பேசேம்! பாராட்டேம்! போற்றவும் மாட்டேம்; உலக ஒருமை, உயிர் ஒருமை ஆகியவற்றுக்கு ஊற்றுக் கண்ணாம் பண்பாட்டுப் பொதுமையையே இறைமையாகக் காட்டுவேம்" என்று தேர்ந்து தெளிந்து முதல் அதிகாரத்தைப் பாடினார்.

'இறைமை' என்பது எங்கும் தங்கியிருப்பது! எங்கும் தங்கியிருப்பது என்றால், எதிலும் தங்கியிருப்பது, என்றும் தங்கியிருப்பது என்பனவும் வெளிப்படைதாமே!

'உலகியற்றியான்' எனப்படுபவன் ஆட்சி முறையை ஆக்கியவன் என்பதை உணர்வார், 'வகுத்தான் வகுத்த வகை' என்பது அவ்வாட்சி முறையையே என்பதையும் அறிவார்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’

என்பதைக் காண்பாராக.

(385)

-

""

இனி, 'தாமரைக் கண்ணான்' என்றும் "அடியளந்தான்' என்றும் குறிப்பிடுகிறாரே? அவை திருமாலைத் தானே! அப்படி யானால் திருவள்ளுவர் மாலியப் பற்றாளர் எனலாமே என்பார். பெயரளவில் மகிழ்பவர் ஆவர்.

"நெஞ்சம் இனிக்கும் நேயத் தலைவனும், நேயத் தலைவியும் கூடியின்புறும் இன்பம் தாமரைக் கண்ணான் உலகத்தும் (வைகுண்டத்தும்) உண்டோ? இல்லை?" என்பது மாலுலகப் பெருமை கூறுவதா?

மடியாகிய சோம்பல் இல்லாமல் இயலும் முயற்சியாளனாக ஆட்சியாளன் இருப்பான் எனின், அவனே உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்து விடமுடியுமே! அதற்கென்ன காலடியால் ஞாலம் அளந்தான் கதை வேண்டிக் கிடக்கிறது? என்று கூறுவது மாலின் பெருமை கூறலா?