பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

அவ்வாறானால் தாமரைக் கண்ணான் உலகையும், அடியளத்தலையும் பழிப்பது திருவள்ளுவரின் நோக்கமா?

இல்லை! அவற்றை எவர் கண்டார்? கண்டார் எனினும் 'கண்டவர் விண்டிலர்" என்பதும் “விண்டவர் கண்டிலர்” என்பதும் விளக்கி விடுமே!

தாமரைக் கண்ணான் உலகை நினைத்து, வாழும் உலகைப் பாலையாக்கி விடாதே, என்பதற்கும் அடியளந்தானைப் பாராட்டிக் கொண்டு செய்வகையற்றுச் செயலற்றுச் சோம்பிக் கிடவாதே! குடியை உயர்த்துதற்கு மடிமை ஒழி! நீ அரும் பெருஞ் செயல்களையெல்லாம் செயற்கரிய செயல்களை யெல்லாஞ் செய்த முடிக்கத் தெய்வமே மடிமை நீங்கி உனக்கு துணை நிற்க ஓடிவரும் என்பதற்கே கூறினார்.

மறுமையை நினைத்து இம்மையை இழக்காதே; இழிவு செய்யாதே! இருக்கும் வீட்டை எழிலாய் - இனிதாய் வைத்துக் கொள்ளத் தெரியாதவன்தானா, எடுக்கப் போவதாக இருக்கும் வீட்டிலே எழிலும், இனிமையும் தவழச் செய்வான்? மாட்டான் என்பதை உறுதிப்படுத்துமாறே கூறினார்.

வள்ளுவநோக்கு வளநோக்கு; வாழும் வளநோக்கு! வையகமெல்லாம் வாழும் வளநோக்கு!