பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

யான் என்ன செய்துவிட்டேன் என்று தானே வருந்தும் செயலைச் செய்யாதிருப்பாயாக. அவ்வாறு தவற்றை ஒருகால் தன்னை மறந்து செய்துவிட்டதை உணர்ந்தால், மீண்டும் அத்தகு குற்றச் செயலைச் செய்யாதிருத்தலே உனக்கும் பிறர்க்கும் உலகுக்கும் நலமாம் என்கிறார்.

-

வேறு வகையால் உலகோர் தேடிக்கொள்ளும் கழுவாய் எல்லாம் (பாவ நீக்கம் என்பனவெல்லாம்) வழுவாய் (குற்றமானவை) என்பது வள்ளுவர் உள்ளக நோக்காம்.

மெய்யான கழுவாய் ஈதே என உணர்ந்து விட்டால், வழுவாய் வாராது; வழுவாய்க்காக வருந்துதல் வாராது. எதிரி டையாக வழுவாய் புரியும் நிலையும் வாராது. இவ் வாழமிக்க கருத்தைத்

“திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று‘

என்றார்.

(157)

செய்யத் தகாத தீமையைத் தனக்குப் பிறர் செய்தார் எனினும், அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்குத் தான் வருந்தியவனாய் அறமல்லாத செயலைச் செய்யாதிருத்தல் இருபாலும் நன்மையாம். தான் தீமை செய்யாமல் இருந்தும் தீமை செய்வானுக்கும் அத் தீமை செய்தலால் அவனுக்குத் தீமையை மாறாகச் செய்யான். அத்தீமை செய்து அவனுக்குத் துயரும். அதனைச் செய்தேனே எனத் தனக்குத் துயரும், உணடாக்கிக் கொள்ளான் என இருபால் நலமும் இயற்கையால் இயைதலை இனிதின் அறிந்ததால் திருவள்ளுவர்க்குப் பின்வந்த சான்றோர் ஒருவர்,

“தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூஉம் சான்றோர் கடன்”

எனத் தாம் சார்ந்த சமயச் சார்பு வழியில் வினைக் கொள்கையாக விரித்துக் கொண்டார்! இது நிற்க.

திருவள்ளுவர் இதற்கு மேலாம் நிலையில் சென்று,