பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

டைச் செருகல் மட்டும் இல்லை; தலைச் செருகல், கடைச் செருகல், விடுபாடு, சேர்பாடு என்பனவும் உண்டு!

“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்”

என்னும் புறநானூற்று மொழிக்கு முற்படவே, தொல்காப் பியத்தில் இடம் பெற்றதாய்க் காட்டச் சான்று மரபியலாயிற்றே! தொல்காப்பியத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் பிறப்பு வேற்றுமை பேசப்பட்டு இருப்பினும்

“பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” (972)

என்னும் பெருநாவலர் பெரு நெறியைப் போற்றியிருப்பின் வேற்றுமைச் சாதிகளின் வேரும், வேரடி மண்ணும் தோண்டி அகற்றப்பட்டிருக்கும் அல்லவோ!

உயர் திணை என்பது உயர் ஒழுக்கம்

அஃறிணை என்பது அவ்வுயர்வில்லாத ஒழுக்கம் என இரண்டாகப் பகுக்கப் பட்டதே தமிழ் இலக்கணம்! திண்மையாம் கட்டொழுங்கே திணை எனப்பட்டது!

திருவள்ளுவர் தேர்ந்து சொல்கின்றாரே:

“ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்" (133)

என்று, வள்ளுவர் கண்ட குலமும் குடியும் பிறப்பு வழிப் பட்டனவா?

(957)

குற்றம் செய்ய அஞ்சுவாரும், நாணுவாரும் உயர்குடியர்

நற்குடிப் பிறந்தான் என்பதன் சான்று அவன் சொல்லும் சொல் (959)

நல்லவற்றில் பற்றில்லாதவன், பிறந்த குடி பெருமைக் குடி ஆகாது. (958)

இகழாது ஈயும் ஈகையன் நற்குடிப் பிறந்தான் (223)

குடி, குலம், சுற்றம், இனம் என்னும் சொற்களையன்றிச் சாதிமைச் சொல்லோ, சாதிமைச் சுட்டோ அற்றது வள்ளுவ நோக்கு.