பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

183

எல்லாம் உண்டு" என்று அறக் கொள்ளை நடத்தியவர்களா - நடத்துபவர்களா அவர்கள்?

66

“அறவிலை வணிகன் ஆய் அலன்”

என்னும் பொன்மொழி புறநானூறாம் வைரப்பேழையில் உள்ளது. ஆனால் வாழ்வில் காணும் தொண்டு நிலையங்கள் நோக்கும் போக்கும் பார்த்தால் எத்தனை நிலையங்கள் மெய்த்தொண்டு நிலையங்கள் என்னும் வணக்கத்திற் குரியவையாக இருக்கும்?

"கச்சையில் காசு வைத்துக் கொள்ளாதீர்” என்பது கிறித்து பெருமான் தொண்டர்களுக்கு உரைத்த நல்லுரை!

66

'ஊரை நம்பு; உன் தேவையை ஊர் நிறைவேற்றும்” என்பது இதன் உட்கிடை!

காசு இல்லை என்பது மட்டுமில்லை! பேரும் இல்லாமல் 'துறவி' என்னும் பெயரோடு வந்தார் ஒருவர்! சிற்றூர் மடம் ஒன்றைக் கண்டு தங்கினார். பெரியவர்கள் சிலர் மடத்தில் சீட்டாடிக் கொண்டிருந்தனர். சிலர் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் கோலி விளையாடிக் கொண்டி ருந்தனர். மடத்திற்கு முன்னிருந்த கிணற்றில் பெண்கள் சிலர் நீர் றைத்துக் கொண்டிருந்தனர். நீரை இறைப்பவர் நீரும் சேறுமாகக் கிடந்த இடத்தில் நின்று கொண்டு இறைத்தலைக் கண்டார் துறவி. பக்கத்தே நந்தவனம் நீரின்றி வாடிக் கிடப்பதையும் கண்டார்.

பையன்களிடம் கேட்டு மண்வெட்டி, கூடை, கம்பி ஆ ஆகியவை பெற்றார். கிணற்றைச் சுற்றிக் கிடந்த நீர்க்கு வடிகால் அமைத்து நந்தவனத்தில் விடத் திட்டமிட்டார். வெட்டக் குனிந்தார்! பிள்ளைகள் உதவிக்கு நின்றனர். கிணற்றுச்சுற்று நீர் வடிந்தது. வெட்டிய மண்ணால் கிணற்றுச் சுற்று மேடாயது. நந்தவனம் நீர் பெற்று வாட்டம் நீங்கியது.

துறவியைப் பிள்ளைகள் விரும்பினர். புதிய விளையாட்டுக் கற்பித்தார். பாட்டுப் பாடினார்; பாடப்புத்தகம் கொண்டு வரச் செய்து கற்பித்தார். மடம் பள்ளிக்கூடம் ஆயது.

மருத்துவம் தேர்ந்தவர் அவர். ஊர் மருத்துவர் ஆனார்; ஊருள் ஒருவரானார் அவர்; ஊர் அவராகியது! அவர் கொண்டு வந்ததும் கொண்டிருந்ததும் ஒன்றே, ஒன்றே! அது தொண்டே, தொண்டே!