பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"தொண்டர் தம் பெருமை சொல்ல ஒண்ணாதே" என்பது பாட்டி வாக்கு! எத் தொழிலும் உயர்வோ தாழ்வோ உடைய தில்லை! அத்தொழிலைச் செய்யும் வகையாலேயே உயர்வும் தாழ்வும்.

காவல்துறை ஆய்வாளர் ஒருவர்! எந்த ஊர்க்குப் போனாலும் வழக்குப் பதிவிராது! வழக்கே வராதா? வரும்! வந்தால் இருதரப் பாரையும் அழைத்து வன்பு துன்பு இல்லாமல் தீர்த்து விடுவார்! அவர்க்குப் பெயர் வேறு! ஊரவர் இட்ட பெயர் 'இராமலிங்க சாமி!' 'ஆம்! வள்ளலார் பெயர்தான்'. வள்ளலார் நெஞ்சம் அவர் நெஞ்சம்! அருட்பா வாய், அவர் வாய்! காவல் துறைப் பவானந்தர் செய்த தமிழ்ப் பதிப்புப் பணி எத்தகையது?

"மன்னார்குடியில் காக்கி உடையில் காவல்துறையில் தொல்காப்பியரைக் கண்டேன்" எனப் பொறிஞர் பா. வே. மாணிக்கரால் கூறப்பட்ட சோமசுந்தரர் சீர்மை என்ன?

“சிறபபொவ்வா செய் தொழில் வேற்றுமையால்” என்னும் வள்ளுவ நோக்கின் வளம் நினைதோறும் விரிவதாம்.