பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஊழ்

முயற்சியின் சிறப்பை முன்னே கண்டோம்.

முயற்சியைச் செய்வினை கெடுக்குமா?

செய்யாவினையே - முயற்சியில் ஈடுபடா மடி என்னும் சோம்பலே முயற்சியின் வெற்றியைக் கெடுக்கும்.

முயற்சியை அவரவர் செய்யும் ஆக்கவினை கெடுக்காது. அழிவு வினை கெடுக்கத் தவறாது.

ஆக்க வினையும் அழிவு வினையும் இப்பிறப்பில் செய்வனவே?

முற்பிறப்பையே நாம் உணர முடியாதபோது, நாம் முற் பிறப்பில் செய்த வினையை எப்படி உணர்வது? மனத்தகத்தே இப்படி அப்படி என எண்ணிக் கொள்ளலாமேயன்றி,

மெய்ப்பிக்க வாய்ப்பு இல்லையே!

வள்ளுவ நோக்கம் உணராராய், அவர் ஊழ் என்றதைப் பின்னவர் ஒட்டி மூட்டி வைத்த 'ஊழ்வினை எனக்கொண்டு வினைப்பயன்’, ‘தலைவிதி’ ‘அன்று எழுதிய எழுத்து' எனப் பலர் கூறிய கருதுகோள் மூட்டிய மூட்டுதலே, திருவள்ளுவர் கருதாப் பொருளை ஊழுக்குத் தர வைத்ததாம்.

-

தொல்காப்பியம் தொட்டு பாட்டு தொகை திருக்குறள் வரையான இருபது நூல்களில் 'ஊழ் என்பது 96 இடங்களில் து வருகின்றது. அவற்றுள் ஓரிடத்துத் தானும் ‘ஊழ்வினை' என்னும் ஆட்சி இல்லை அதனைத் தமிழ்ப் பரப்பில் முதற்கண் ஒட்டிக் கூறியவர் இளங்கோவடிகளாரே.

-

'ஊழ்' என்று நிமித்திகன் எதைச் சொன்னானோ அதனைப் பொய்யாகச் செய்தவர் எவரோ, அவரே 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று கூறிய செய்தி அஃதாம்!

வள்ளுவர், மலர்க்கொத்து விரிதலை 'இணர் ஊழ்த்தல்’ என்று ஆள்கிறார். எவர் ஆணைக்கும் உட்படாமல் இயலும்