பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பொருளைக் கொடுத்து பொறிபுலன்களைச் செயலறக் கெடுத்துக் கொள்வதற்கா இக்குடிப்பிறவி பிறந்தது? (925)

நஞ்சைக் குடித்தால் உடன் சாவு; மதுவைக்குடித்தால் தவணைச் சாவு; நஞ்சை உண்பதற்கும், கள்ளை உண்பதற்கும் என்னதான் வேறுபாடு?

இவ்வளவும் கூறிய திருவள்ளுவர், குடியன் திருந்துதற்குக் கடைசி வாய்ப்பாக ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

"குடித்து மயங்கியவன் தன்னை அறியமாட்டான்; தான் செய்ததை உணரமாட்டான்; பிறர் சொன்னதைக் கேட்கவும் மாட்டான்; பிறர் நகைப்புக்கு நாணவும் மாட்டான்; ஆனால் குடியாத போது, குடித்துவிட்டுக் கிடப்பவன் கிடக்கும் நிலையைக் கண்டாலாவது, நானும் குடித்த நிலையில் இப்படித் தானே கிடப்பேன் என்று எண்ணியாவது திருந்தமாட்டானா?" என்று ஏங்குகிறார் வள்ளுவர். அதனால்,

“கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு’

என்கிறார்.(930)

அறிவாளர் செய்யும் பிழையானால் என்ன? ஆள்வோர் செய்யும் பிழையானால் என்ன?

பிழை பிழையே என்பது அறவர் கடமை; அதனை உணர்ந்த அறவர் திருவள்ளுவர் 'உண்ணற்க கள்ளை' என ஓங்கிக்குரல் கொடுத்தார்!

சங்கச் சான்றோர் என்று பாராட்டுகிறோமே! அச் சான்றோர் தம் வாழ்வில் சான்றாகவில்லையே என வருந்தியமையால்தான், திருவள்ளுவர் உள்ளார்ந்த கவலை பெருக்கெடுக்கச்

“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை”

என்றார்.

(990)

மதுவொழிப்புக்கு முதன் முதலாய்த் தமிழ் மண்ணில் குரல் கொடுத்த மாமணி திருவள்ளுவர் ஆவர். உலகம் உய்வதற்கு அவர் நோக்கிய தனிப்பெரு நோக்குகளில் ஒன்று மதுவிலக் காகும். கற்பது தன் கசடு அறுவதற்குக் கற்பதாய் அமைந்தால், அதன்படி நிற்பதற்குத் தடையெதுவுமில்லையே!